:: ஈழம் குறித்த செய்திகள் மற்றும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள்:: Tamil forum, ezham news, creativity corner

Sunday, March 23, 2008

பிரிண்ட் Screenஐ கேப்ட்சர் செய்வதற்க்கு

பொதுவாக நாம் ஸ்கிர்ன் – ஐ கேப்ட்சர் செய்வதற்க்கு “PRINT SCREEN” கிளிக் செய்து பின்னர் பெயின்ட் புரோக்ராமில் பேஸ்ட் செய்வோம். இவ்வாறு செய்யும் பொழுது நீங்கள் கேப்ட்சர் செய்த விண்டோவுடன் உங்கள் சிஸ்டம் டாஸ்க்பாரில் மினிமைஸ் செய்த விண்டோக்களுக்கும் தெரியும்.ஆக்டிவ் விண்டோவை மட்டிலும் நீங்கள் கேப்ட்சர் செய்வதற்க்கு “ALT + PRINT SCREEN” கிளிக் செய்து பின்னர் பெயின்ட் – ல் பேஸ்ட் செய்ய நீங்கள் தெரிவு செய்த விண்டோ மட்டிலும் பேஸ்ட் ஆகும் மற்ற மினிமைஸ் செய்த விண்டோக்கள் மற்றும் சிஸ்டம் டாஸ்க்பாரும் தெரியாது.

Friday, March 21, 2008

கணணி பராமரிப்புக்கு 8 ஆலோசனைகள்

உங்கள் கணினிகளை சிறப்பான செயல்திறனுடன் பராமரிப்பாக வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.தற்போதைய ஐ.டி. உலகில், நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணினிதான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணினியில்தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது.நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணினிவழிதான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம். இந்த நிலையில் கணினி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்?நாம் கணினியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது. அல்லது நாம் சேமித்து வைத்டிருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கணினியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது?இதுபோன்ற நிலையைத் தவிர்த்து, நம் கணினியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.
  1. கணினிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணினியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் ஹார்ட் டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
  2. வைரஸ் ஒழிப்பு மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும்: எந்த ஒரு கணினியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  3. ஃபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் ஃபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.விண்டோஸ் எக்ஸ்.பி. மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்கள் ஃப்யர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.
  4. டீஃப்ராக் செய்யவும்: டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கணினியின் ஹார்ட் டிஸ்கை ஒழுங்கமைக்கிறது. அதாவது கோப்புகளை தாறுமாறாக ஆங்காங்கே வைக்காமல் அடுத்தடுத்து வைத்து நிறைய காலி இடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது. இதனால் கணினியின் வேகம் பாதுகாக்கப்படும். நாம் நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறோம், அல்லது இன்ஸ்டால் செய்தவற்றை ரத்து செய்கிறோம், கோப்புகளை அடிக்கடி அழிக்கவும் செய்கிறோம். இதனால் டீஃப்ராக் செய்வது மிக அவசியமான ஒரு நடவடிக்கையாகும்.
  5. டிஸ்க்கை சுத்தம் செய்யவும்: உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் எச்சசொச்சங்களையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும்.
  6. இணையதள டவுன்லோடுகளை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று இசைகளை டவுன்லோடு செய்வோம். இதிலெல்லாம் கணினியை இயங்க விடாமல் செய்யும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.
  7. பயன்படுத்தாத புரோகிராம்களை ரத்து செய்யவும்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கன்ட்ரோல் பேனலில் உள்ள ஆட்/ரிமூவ்-ஐ பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கணினியின் செயல்திறன் அதிகரிக்கும்.
  8. கணினியை சுத்தம் செய்யவும்: கணினியின் உட்பகுதிகளில் தூசிகள் மண்டி விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணினியை உஷ்ணம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும்.

http://www.paraparapu.com/latestnews.php/2008/02/29/2965-2979-3007-2985-3007-2986-2992-3006-2990-2992-3007-2986-3021-2986-3007-2993-3021-2965-3009-8-2950-2994-3019-2970-2985-3016-2965-2995-3021.html

office 2008 அறிமுகம்

Mac இயங்குதள பாவனையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியொன்றை மைக்ரோசொவ்ற் நிறுவனம் கடந்த 9ம் திகதி Macworld conference இல் வெளியிட்டது.
புதிய Mac இயங்குளத்திற்கான office பதிப்பு Office 2008 என்ற பெயரில் 2007 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட உள்ளது. இது PowerPC மற்றும் Intel based Macs இரண்டிலும் இயங்கக்கூடியதாக இருக்கும். இந்த பதிப்பு பயனாளர்களின் தேவைகளை இலகுவாக்கக்கூடியதாக பல புதிய கருவிகளை கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த Mac பதிப்பு கொண்டிருக்கப்போகும் சில வசதிகள். (இவ்வசதிகள் Windows பதிப்பில் உள்ளடக்கப்படவில்லை)Publishing Layout View - இது பயனாளர்களை newsletters, filers போன்றவற்றை இலகுவாக உருவாக்க உதவும்

Ledger sheet - எந்த ஒரு பயனாளரையும் இலகுவாக Excel இல் கணக்குகளை கையாள இது உதவும்.

My day - இது ஒரு தன்னிச்சையாக இயங்கும் மென்பொருள் போல இயங்கும். அத்தோடு ஒரு நாட்காட்டி போல பயனாளர்கள் தங்கள் தினசரி வேலைகளை குறித்து செயலாற்ற உதவும். இதற்கு Desktop இல் அதிக இடம் தேவையில்லை.

இதைவிட இது Mac இயங்குதளத்துடன் வேறெப்போதையும் விட மிகுந்த ஒத்திசைவை காட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்களுக்கு
http://oorodi.blogspot.com/2007/01/microso...ffice-2008.html

Save the computer

நீங்கள் புதிதாக கணிணி வாங்கி உள்ளீர்களா? அல்லது ஏற்கனவே கணிணி வைத்துள்ளீர்களா இதோ உங்கள் கணிணியை எளிதாக காக்கும் சில வழிமுறைகள்....

1.கணிணியை UPS இல்லாமல் உபயோகபடுத்த வேண்டாம்ஏனெனில் சில நேரங்களில் மின் வெட்டின் காரனமாக உங்கள் கணிணி சேமிப்பகம் பழுதடைய வாய்ப்புள்ளது.

2.கணிணியில் அதிகமான படங்கள் , கேம்ஸ்கள் , இன்னும் தேவையில்லா சில சாஃப்ட்வேர்களை நிறுவுவதை தடுக்கவும்.

3.உங்களுக்கு தேவையான சாஃப்ட்வேர்களை நிறுவிய பின் தேவையில்லா சாஃப்ட்வேர்களை உங்கள் Control Panel – Add Remove Program மூலம் அழித்து விடவும்.

4.உங்கள் கணிணியில் Internet இனைப்பு உள்ளதா? அவ்வாறெனில் நீங்கள் கட்டாயம் Anti - Virus நிறுவுதல் வேண்டும்5.கணிணியை உபயோக படுத்திய பின் கணிணியின் கணிணியின் பவர் கேபிளை பிடுங்கிவிடவும் இல்லை எனில் மதர்போஃர்ட் பழுதடைய வாய்ப்புகள் உள்ளன...

Switch Off the Auto play

Windows Xp - ல் நீங்கள் சி.டி டிரைவில் சி.டி இட்டவுடன் Auto Play ஆகும்.சிலருக்கு Auto Play ஆவது பிடிக்காது ஏனில் Auto Play ஆகும் தருணத்தில் கணிணி மிக நேரத்தினை எடுத்துக்கொள்ளும். சரி Auto Play ஆகாமல் இருக்க என்ன செய்வது ?உங்கள் கமாண்ட் ப்ராம்ட் (Start-Run-) ல் gpedit.msc என டைப் செய்ய ஒரு புதிய விண்டோ திரையில் தோன்றும்

Local Group Policy – User Configuration – Administrative Templates – User Configuration – System – Turn Off Auto Play - Disable

அதில் Turn Off Auto Play ல் இரு முறை கிளிக் செய்து அதனை Disable செய்யவும் தற்போது அனைத்து Window களை யும் முடிவிட சி.டி யை டிரைவில் இட அது தற்போது Auto Play ஆகாது.

கனினியில் FAREWALL ஆன் செய்ய

FAIRWALL நமது கணிணியில் windows O/Sனால் அறியமுடியாத புரோகிராம்களை தடுக்ககூடிய ஒரு மென்பொருள், இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்.பி. மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்களில் நிருவப்பட்டே வருகிறது. நீங்கள் அடிக்கடி இணையதளத்தினை பயன்படுத்துபவரா இருப்பின் கண்டிப்பாக ஃபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். மேலும் உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.உங்கள் கனினியில் ஃபயர்வாலை ஆன் செய்ய:-

Control Panel – Security Centre – Windows Firewall - on